இலந்தைப் பழம்
சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக
நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை
எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும்
சாப்பிடுவது நல்லது.
பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.
இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான்
கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல
வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.
இந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்
எல்லோரும் வாங்கும் பழம்..
இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்
இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..
இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப்
பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப்
பற்றியும் பார்ப்போம்.
இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.
சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.
இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
Tamil - Elandhai
English - Chinese date
Telugu - Regi pandu
Malayalam - Ilanta
Hindi - pitni-ber
Sanskrit - Kola
Botanical name - Ziziphus mauritiana
பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த
உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்
இலந்தை நெறுங்கனியை யெண்
- அகத்தியர் குணபாடம்
நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி
குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்தப் பழத்தில் இனிப்புச்
சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு
புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள்
நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம்
உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.
எலும்புகள் வலுப்பெற
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து
காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து
போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு
வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.
பித்தத்தைக் குறைக்க
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம்,
தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர்
அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச்
சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
வாந்தி குறைய
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும்.
இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட
அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும்.
இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி
ஏற்படாது.
உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி
உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும்.
முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய
முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத்
தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத்
தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
செரிமான சக்தியைத் தூண்ட
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல்
கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன்
மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2
கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை
உண்டாக்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.
கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில்
ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும்
சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.
தயிர்
தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்..!
பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!
சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில
1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.
5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.
1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)
3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

செவ்வாழை..!
செவ்வாழை..!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய். . .
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும். . .
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும். . .
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும். . .
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும். . .
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

எளிய இயற்கை உணவு தயாரிப்பு
சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு
''சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. . இதோ சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு
பீட்ரூட் கீர்:
சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக
இதைத் தரலாம்.
வாழைப்பூ சட்னி:
நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய
இஞ்சி, உப்பு கலந்து அரைக்க... வாழைப்பூ சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு சட்னியாகவோ, சாதத்துக்குத் துவையலாகவோ பயன்படுத்தலாம். ரத்தவிருத்தி மட்டுமல்ல... நாகரிகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலை போக்கவல்லது வாழைப்பூ.
முருங்கைக்கீரை சூப்:
கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, தோல் நீக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்கினால்... அசத்தலான அயர்ன்
சக்திக்கான சூப் தயார்.
ரத்த சுத்திக்கான புதினா ஜூஸ்:
கைப்பிடி அளவு புதினா தழைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, சுவைக்கு நூறு கிராம் வெல்லம் சேர்த்து, சுமார் அரை லிட்டர் நீர் கலந்தால்... வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச்
சீராக்கும் சுலபமான புதினா ஜூஸ் கிடைக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும் என்பதோடு, சிறுநீர் தொடர்பான தடை மற்றும் எரிச்சலை இந்த ஜூஸ் குணமாக்கும்.
ரத்த விருத்திக்கான பழ சாலட்:
கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடத் தரலாம். மாலை வேளையில் ருசிக்கத் தோதான ஸ்நாக்ஸ் இது.
ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்:
கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சிறிதளவு வறுத்த மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை கலர்ஃபுல்லாக மேலே தூவினால், சுலபமாக நிமிடத்தில் காய்கறி சாலட் ரெடி.
கொத்தமல்லி ஜூஸ்:
ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து, 100 கிராம் வெல்லம் சுவைக்குச் சேர்த்தால்... ரத்த அழுத்தத்தை சீராக்கி வளப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ் தயார். சுலபமான ஜீரணத்துக்கு உதவுவதுடன், பசியைத் தூண்டவல்ல எளிய தயாரிப்பு இது.
வாழைப்பூ மடல் சூப்:
வாழைப்பூவின் இளம் மடல் ஒன்றை சிறுதுண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து
வடிகட்டினால்... ஹீமோகுளோபின் வளத்துக்கான வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம்.
சுவைக்காக சேர்க்கும் வெல்லம், பனை வெல்லமாக இருத்தல் நல்லது. மாற்றாக தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.''

அத்திபழம்
சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்
அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.
சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது." class="img" height="223" src="http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s480x480/13187_114405815412095_1436753155_n.jpg" width="398" />
Subscribe to:
Posts (Atom)