திருமண விருந்துகளில் விரயம் : 339 கோடி ரூபாய் உணவு !
பெங்களூரு
: இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டை ஒரு பிடி
பிடிப்பதோடு வெளியில் வரும் நாம் மீதம் வைக்கும் உணவை குறித்து கவலை
கொள்வதில்லை. ஆனால் ஒரு நகரில் வருடத்திற்கு
திருமணங்களில் வீணாக்கப்படும் உணவை கொண்டு மாத்திரம் இந்தியாவில் உள்ள
இரண்டரை கோடி மக்களுக்கு உணவு கிடைக்கும் என்று அதிர்ச்சி தகவலை சொல்கிறது
சமீபத்திய ஆய்வு.
உலகில் சத்து உணவு கிடைக்காத மூன்று குழந்தைகளில்
ஒரு குழந்தை இந்திய குழந்தை என்பது அதிர்ச்சியான உண்மை. இச்சூழலில்
பெங்களூருவில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் நாராயண
கவுடா தலைமையிலான குழு பெங்களூவில் உள்ல 531 திருமண மண்டபங்களை ஆறு
மாதங்களாக ஆய்வு செய்தது.
அவ்வாய்வு முடிவின் படி பெங்களூருவில் உள்ள 531 திருமண மண்டபங்களில் சுமார் 84,960 திருமணங்கள் வருடந்தோறும் நடக்கின்றன என்றும் 943 டன்கள் உயர் கலோரி உணவுகள் வீணாக்கப்படுகின்றது. சராசரியாக இரு உணவு 40 ரூபாய்கள் என வைத்து கொண்டாலும் பெங்களூருவில் மாத்திரம் சுமார் 339 கோடி ரூபாய்க்கு உணவுகள் திருமணத்தில் வீணாக்கப்படுகின்றன.
ஒரு திருமணத்தில் சுமார் 1000 நபர்கள் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் திருமணத்தில் மதிய உணவும் வரவேற்பில் இரவு உணவும் பரிமாறப்படுகிறது. சுமார் 10 முதல் 20 பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன. வீணாகும் உணவுகளில் பூரி, புலாவ் அரிசி, குளிர் பானங்கள், சூப் போன்றவை அடங்கும்.
ஒரு வருடத்தில் பெங்களூரில் நடக்கும் திருமணங்களில் வீணாகும் உணவை கொண்டு இந்தியாவில் உள்ள 2 கோடி 60 இலட்சம் நபர்களுக்கு ஒரு வேளை வயிராற சாப்பாடு கொடுக்கலாம் என்றும் அவ்வாய்வு தெரிவிக்கிறது. மேலும் பரிமாறப்படும் விருந்துகளை விட பப்பே விருந்துகளில் கூடுதல் விரயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறது.
ஒரு ஊரில் நடக்கும் திருமண விருந்தில் விரயமாகும் உணவை கொண்டே 2.6 கோடி நபர்களுக்கு உணவருந்த முடியும் என்றும் இந்தியா முழுக்க கணக்கிட்டு பாருங்கள். இவ்வாய்வு முடிவாய் சொல்வது போல் இது நம்மிடத்தில் உணவு வீணாவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் திருமணங்களில் உணவுகள் வீணாகாமல் தடுக்க உதவுவோம் என்று நம்புவோமாக.

வெள்ளி, 12 அக்டோபர் 2012
வெள்ளி, 12 அக்டோபர் 2012
Read more about திருமண விருந்துகளில் விரயம் : 339 கோடி ரூபாய் உணவு ! [6173] | சிறப்பு கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com
www.inneram.com

No comments:
Post a Comment